9 November, 2024
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சுவாச பிரச்சனை தான் வீசிங் என்னும் மூச்சிரைப்பு. இந்த வீசிங் பிரச்சனையை கொண்டவர்களுக்கு தூசி சிறிது மூக்கில் ஏறினாலும், அது மூச்சிரைப்பை தூண்டிவிடும். எனவே இந்த பிரச்சனையைக் கொண்டவர்கள் சுத்தமான சூழலிலும், மிகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட மூச்சிரைப்பு என்பது என்ன, இது எப்படி ஒருவரை பாதிக்கிறது மற்றும் இதற்கான காரணங்கள் என்னவென்பது குறித்து அடையாரில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவனையின் நுரையீரல் மருத்துவத்தின் முதுநிலை ஆலோசகரான டாக்டர். சி. அம்மையப்பன் பழனிசுவாமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மூச்சிரைப்பு என்பது என்ன?
மூச்சிரைப்பு (Wheezing) என்பது சுவாசிக்கும் போது கேட்கக்கூடிய விசிலடிப்பது போன்ற ஒரு சப்தத்தை குறிக்கிறது. இதனை ஒரு ஸ்டெதஸ்கோப் மூலம் கேட்க முடியும். தீவிர நிலையில் இது இருக்குமானால் ஸ்டெதஸ்கோப் உதவி இல்லாமலேயே இந்த சத்தத்தை கேட்க இயலும். சுவாசப்பாதையை பாதிக்கிற சில நோய்களின் காரணமாக அவைகள் சுருங்கி குறுகலாகும் போது மூச்சிரைப்பு ஏற்படுகிறது; அல்லது அந்நிய பொருளானது ஒரு குறிப்பிட்ட சுவாசப் பாதையில் அடைப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இது உருவாகும்.
மூச்சிரைப்புக்கான காரணங்கள்
மூச்சிரைப்பிற்கு மிக பொதுவான காரணமாக இருப்பது ஈளை நோய் எனப்படும் ஆஸ்துமா. மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுக்குழாய் விரிவு, மூச்சுநுண்குழாய் அழற்சி, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD), காற்றுப்பாதையில் உள்ள அந்நிய பொருள் போன்றவை மூச்சிரைப்பிற்கான பிற காரணங்களாக இருக்கலாம்.
ஆஸ்துமா நிலையில் மூச்சிரைப்பு மற்றும் நாள்பட்ட நுரையீரல் அடைப்புநோய் ஆகியவற்றில் சுவாசிப்பதில் சிரமம் அல்லது மார்பு இறுக்கம் மற்றும் இருமல் ஆகியவை சேர்ந்திருக்கும். மூச்சிரைப்பிற்கு மிகப்பொதுவான காரணமாக ஆஸ்துமா இருப்பதால், தனக்கு மூச்சிரைப்பு பிரச்சனை இருப்பதாக ஒரு நபர் கூறினால் அவருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது என்று கருதலாம்.
19 November, 2024
மூட்டு வலி வந்தா இப்படி ஒரு ஆபத்து இருக்கா..? உஷார்!” DOCTOR ...
Behindwoods Air
19 November, 2024
MGM Healthcare, Malar in Adyar has inaugurated advanced dialysis an...
TIMES OF INDIA
14 November, 2024
Diabetes affects millions worldwide, often quietly in its early sta...
INDIA TV
Sign up to receive latest news from us