TAMIL BOLDSKY

World Hypertension Day – 2024

World Hypertension Day – 2024

6 June, 2024

உயர் இரத்த அழுத்தம் என்பது உலகெங்கிலும் எண்ணற்ற நபர்களை பாதிக்கின்ற ஒரு மோசமான ஆரோக்கிய பிரச்சனை. காலப்போக்கில் இது அமைதியாக இரத்த நுண்குழாய்களுக்கும், முக்கியமான உடலுறுப்புகளுக்கும் தீங்கு விளைவித்து, கடுமையான உடல்நல பிரச்சனைகளுக்கான ஆபத்தை அதிகரித்துவிடும். அதுவும் இது இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதி உலக ஹைப்பர்டென்சன் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உயர் இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, அடையாரில் உள்ள எம்ஜிஎம் மலர் ஹெல்த் கேர் சென்டரின் உள் மருத்துவ பிரிவின் முதுநிலை நிபுணரான டாக்டர். V.ஜினாதாஸ் அவர்கள் உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும், உண்ணக்கூடாது என்பது பற்றி தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்துள்ளார். அவை பின்வருமாறு:

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

தமனிகளின்/இரத்தக்குழாய்களின் சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், அந்த தொடர்ச்சியான அழுத்தமானது, இதயத்தை பாதிக்கும் மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தொடக்க நிலையில் உயர் இரத்த அழுத்தம் வெளிப்படையான அடையாளங்களையோ, அறிகுறிகளையோ வெளிப்படுத்தாத நிலையில், கார்டியாக் அரெஸ்ட், பக்கவாதம், சிறுநீரக பாதிப்புகள் போன்ற தீவிர பிரச்சனைகள் உருவாவதற்கான ஆபத்தை திடீரென்று அதிகரிக்கின்றன.

உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்

உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் பொதுவாக நுட்பமானவை. இப்பிரச்சனையானது முற்றிய கட்டத்திற்கு செல்லும் வரை அல்லது கடும் சிக்கல்களை உருவாக்கும் வரை கண்டறியப்படாமலேயே இருக்கக்கூடும். உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களுள் சிலருக்கு ஒற்றைத் தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், தலைசுற்றலுடன் மயக்க உணர்வு, மார்பில் அசௌகரியம், வேகமான இதயத்துடிப்புகள் அல்லது மூக்கில் இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும். இந்த அறிகுறிகளை அனுபவித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

இருப்பினும், மேற்குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் உயர் இரத்த அழுத்தத்தினால் மட்டும் குறிப்பாக வருவதில்லை. வேறுபிற காரணங்களினாலும் இந்த அறிகுறிகள் தோன்றக்கூடும். எனவே, இதை கண்டறிவதற்கு உயர் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிப்பதும், திறம்பட அதை கையாள்வதும் முக்கியமானது.

உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்

உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணம் பெரும்பாலும் பல்வேறு அம்சங்களை சார்ந்ததாக இருக்கக்கூடும் மற்றும் இது மரபணு சார்ந்த பரம்பரை பண்புகள், வாழ்க்கை முறை மற்றும் சூழலியல் அம்சங்கள் ஆகியவற்றின் கலவையாக இருக்கக்கூடும்.

ஆரோக்கியமற்ற உணவுகளை உள்ளடக்கிய மோசமான உணவுமுறை, உடற்செயல்பாடு, உடற்பயிற்சி இல்லாமை, அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உயர் இரத்த அழுத்தம் வருவதற்கும், அதிகமாவதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கக்கூடும். கூடுதலாக, வயது, மரபணுக்கள், அதிக உடல் எடை, சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகள் மற்றும் நாள்பட்ட மனஅழுத்தம் போன்றவையும் உயர் இரத்த அழுத்தத்திற்கான ஆபத்தை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தத்தை சமாளித்து, வெற்றி காண்பதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகளுள் ஒன்று இதயத்திற்கு ஆரோக்கியமான உணவு திட்டத்தை பின்பற்றுவது. ஊட்டச்சத்து மிக்க உணவுகள் உயர் இரத்த அழுத்த அளவுகளை கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதுடன், உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சனைகளின் அச்சுறுத்தலையும் குறைக்கும். இதற்கு மிகவும் பிரபலமான டயட்டான DASH டயட் திகழ்கிறது.

Read full article

Event Feature Image

19 November, 2024

மூட்டு வலி வந்தா இப்படி ஒரு ஆபத்து இருக்கா?

மூட்டு வலி வந்தா இப்படி ஒரு ஆபத்து இருக்கா..? உஷார்!” DOCTOR ...

Behindwoods Air

Event Feature Image

19 November, 2024

New units at MGM Healthcare Malar

MGM Healthcare, Malar in Adyar has inaugurated advanced dialysis an...

TIMES OF INDIA

Event Feature Image

14 November, 2024

World Diabetes Day 2024: Is feeling thirsty a warn...

Diabetes affects millions worldwide, often quietly in its early sta...

INDIA TV